TRB PG Assistant: முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு! தமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணி தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு trb.tn.nic.in இணையதளத்தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. முதுநிலை ஆசிரியர் பணிக்கான முதனிலைத் தேர்வு (கணினி வழி) கடந்த கடந்த செப்டம்பர் மாதம் 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த வாரம் பாடங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் பட்டியலும், 21 ஆம் தேதி மீதமுள்ள பாடங்களின் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது முதுநிலை ஆசிரியர் பணிக்கு யார் யார் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் என்பது வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான...
Posts
Showing posts from October 27, 2019