Posts

Showing posts from October 22, 2019
குரூப் 2: முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் திங்கள்கிழமை வெளியிட்டார். முதனிலைத்தேர்வு: முதனிலைத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. தமிழகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழுள்ள அலகுகள் -8, 9 ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். மாத இறுதியில் வெளியீடு: தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இந்த மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும். முதன்மை எழுத்துத் தேர்வு: முந்தைய மாற்றத்தின்படி, மு
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு கூடுதல் அரைமணி நேரம் ஒதுக்கீடு..  கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் என அறிவிப்பு 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வு எழுத ஏற்கனவே இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள் கடந்த ஜுலை மாதம், 2019-2020ம் கல்வி ஆண்டில், மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை[பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டது.அதன்படி பத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுக