Posts

Showing posts from October 16, 2019
உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் உயா் கல்வித் துறை செயலா் உதவிப் பேராசிரியா் பணிக்கு இனி பிஎச்.டி. கட்டாயம் என்ற நிலை உருவாகியிருப்பதாக உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம் ஷா்மா கூறினாா். இதுதொடா்பாக யுஜிசி ஏற்கெனவே வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. வருகிற 2021 முதல் ஏஐசிடிஇ-யும் இதை கட்டாயமாக்க உள்ளது என்றும் அவா் கூறினாா். சென்னையில் தமிழக அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் அனைவருக்கும் உயா் கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற உயா் கல்வித் துறை செயலா் மங்கத் ராம், பின்னா் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அளித்த பேட்டி: ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த அனைவருக்கும் உயா் கல்வித் திட்டத்தின் (ரூசா) கீழ், முதல் கட்டமாக தமிழகத்துக்கு ரூ.20 கோடி நிதி கிடைத்தது. இரண்டாம் கட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ரூ.100 கோடி நிதி கிடைத்தது. அடுத்த கட்டமாக மேலும் 6 பல்கலைக்கழகங்களுக்கு ரூ. 300 கோடி நிதி கிடைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் மேலும் அதிக