புதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும் 🎙தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடங்கள் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.* 🎙வெறும் தகவல் களஞ்சியங்கள் மட்டுமே புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டு அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் அவர்கள் அதிக அக்கறைகாட்டவில்லை என்பதுதான் துரதிருஷ்டம். _அழுத்தம் தரும் பாடங்கள்:_ 🎙கிட்டத்தட்ட அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள், உதாரணமாக, பத்தாம் வகுப்பு கணக்குப்
Posts
Showing posts from October 12, 2019