முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்; ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் களுக்கான ஆன்லைன் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகியவற்றுக்கான தேர்வு நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 3 நாட்கள் ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் ஜி.லதா நிருபர்களிடம் கூறியதாவது:- முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஆண்கள் 63,375 பேரும், பெண்கள் 1 லட்சத்து 22,080 பேரும், திருநங்கைகள் 8 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 154 மையங்களில் இந்த தேர்வு காலை, மாலை என 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுவது எளிதான முறை. மேலும் பாதுகாப்பானது. தேர்வு முடிவுகளையும் துரிதமாக வெளியிட முடியும். இந்த த...
Posts
Showing posts from September 26, 2019