
TRB தேர்வு எழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு.. கணினி வழி தேர்வு எழுதும் என் சக ஆசிரியர்களுக்கு நான் TRB CS தேர்வு எழுதினேன்.. எனது அனுபவத்தை கூறுகிறேன். 27,28,29/09/2019..தேதிகளில் TRB தேர்வு எழுதும் நண்பர்களின் கவனத்திற்கு.. கொண்டு செல்லவே இந்த பதிவு.. # PG_TRB_வழிமுறைகள் 1. தேர்வுகூடத்திற்கு தேர்வுகூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள Reporting Time க்கு முன்னர் சென்றுவிடவும். 2. தவறாமல் தேர்வுகூட அனுமதி சீட்டினை எடுத்து செல்லவேண்டும். 3. தேர்வுகூட அனுமதி சீட்டில், விண்ணப்பத்தில் ஒட்டியே அதே போட்டோ ஒன்று ஒட்ட வேண்டும். 4. தேர்வுகூட அனுமதி சீட்டுடன் ஆடையாள அட்டை ஒரிஜினல் ஒன்றும் (விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அடையாள அட்டை அல்லது வேறு ஏதாகிலும் ஒன்று) எடுத்துச் செல்லவேண்டும். 5. தேர்வுகூட அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக மொபைல் போன், பெல்ட், ஆபரணங்கள், ஹீல்ஸ் செப்பல் ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. 6. Rough work செய்வதற்கு தேர்வு கூடத்தில் பென், பென்சில், பேப்பர் ஆகியவை தரப்படும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப கொடு...