Posts

Showing posts from September 9, 2019
வரும் காலங்களில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய பாடத்திட்டம் குறித்து தற்காலிக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் உள்ளனர். எங்கோ ஒரு இடத்தில் பாலியல் தொல்லை நடைபெறுகிறது. இத தொடர்பாக சட்டரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டு, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் மிகக்குறைந்த அளவிலே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். டெட் தேர்வு என்பது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. எனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், ஆசிரியர்களுக்கு புதி...
Image
Flash News : TRB - கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Image
புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்-செங்கோட்டையன் புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.