Posts

Showing posts from September 3, 2019
Image
TRB - உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் சிக்கல்? : பட்டதாரிகள் பதற்றம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள 2340 இடங்களுக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 81 பணியிடங்கள் பின்னடைவு இடங்கள். பற்றாக்குறை இடங்கள் 4, தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் 2252, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 3, என மொத்தம் 2340 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் புதிய நபர்கள் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை  ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் கடந்த 28ம் தேதி  வெளியிட்டது. மேற்கண்ட உதவி பேராசிரியர் பணிகளுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில...