Posts

Showing posts from August 29, 2019
Image
மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்துடன்2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதிபள்ளிக்கல்வி துறை அறிவிப்பு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் 2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்து உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் படித்து அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்துவதற்கு ஏதுவாகவும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கருதியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய 11 பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற நபர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ...