ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஏன் இவ்வளவு பேர் ஃபெயிலானார்கள்? கல்வி வட்டாரத்தில் இரண்டு நாள்களாகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாயிருக்கும் விஷயம் டெட் தேர்வு முடிவுகள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற தகுதித்தேர்வு எழுதுவது அவசியம் என, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி 1 முதல் 5 வகுப்பு வரைக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட் - முதல் தாள்) ஜூன் 9-ம் தேதி 6 முதல் 8 வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட் - இரண்டாம் தாள்) நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் லட்சணக்கானவர்கள் எழுதினர். இத்தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 20 மற்றும் 22-ம் தேதிகளில் வெளியானது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 1,62,313 பேர் எழுதியிருந்த நிலையில், தேர்ச்சிப் பெற்றவர்கள் 482 பேர் மட்டுமே. அதேபோல, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளை 3,79,733 பேர் எழுதியிருந்த நிலையில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை 1 சதவிகிதத்தைத் தாண்டவில்லை. இதுபோல தேர்ச்சியின்மை இதற்கு முன் நடந்திருக்குமா என்பது பெ...
Posts
Showing posts from August 26, 2019