Posts

Showing posts from August 24, 2019
TET 2019 - தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் தோல்வி ஏன்? பள்ளிக் கல்வி அமைச்சர் விளக்கம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பாடத்திட்டம் என்பதால் டெட் தேர்வில் அதிகமாக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையாமல் இருந்துள்ளனர். எனினும் தேவையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது கூடுதல் தகுதி தேர்வு மட்டுமே. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிகமாக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம். அவ்வாறு நியமிக்கும் ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை தெரிவித்துவிட்டால், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமாக  அரசு நிர்ணயித்த 10 ஆயிரத்தை அரசே வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
TET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வில் 551 பேர் தான் பாஸ் - ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளில், 551 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக, டி.ஆர்.பி., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 0.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 99.67 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு என்ற, &'டெட்&' தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில், தமிழகத்தில் நடத்தப்பட்டது. இதில், இரண்டு தாள்களிலும் சேர்த்து, 5.42 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதல் தாளை பொருத்தவரை, பிளஸ் 2வில் குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று, டிப்ளமா கல்வியியல் முடித்தவர் முதல், பி.எட்., முடித்தவர் வரை, தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்கு, 6 முதல், 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வகையில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. 0.33 சதவீதம் குழந்தைகள் மேம்பாடு, பயிற்றுவித்தலில், 30; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகியவற்றில், ஏதாவது ஒரு மொழி பாடத்தில், 30; ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியலில், தலா, 30 மதிப்ப