TET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா? தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை!! "டெட்" எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில், 99 சதவீதம் பேர் தேர்ச்சி அடையாத நிலையில், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என தேர்வெழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த ஜுன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இதன் முதல் தாள் தேர்வு முடிவானது செவ்வாயன்று வெளியானது. அதன்படி முதல் தாள் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 62,314 பேரில், ஒரு லட்சத்து 61, 832 பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். மொத்த மதிப்பெண்ணான 150-க்கு அதிகபட்சமாக 99 மதிப்பெண்ணும் குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண்ணும் தேர்வாளர்கள் பெற்றனர்.மொத்தமாக 0.34 சதவீதம் பேர் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் 2-ம் தாள் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், அதிலும் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் தோல்வியடைந்துள்ளனர். ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில், 3 லட்சத்து 79, 733 பேர் பங்கேற்றனர். இதில், 3 லட்சத்து 79,38
Posts
Showing posts from August 23, 2019
- Get link
- X
- Other Apps
TET தேர்ச்சி சதவீதம் இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்? - ஒரு பார்வை 1) கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற நிலை மத்திய அரசு 23/08/2010 ல் அறிமுகம் செய்தது. 2) தமிழகத்தில் 15/11/2011 (அரசாணை - 181) இல் RTE சட்ட மொழிவை எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. 3) ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தெளிவான கட்டமைப்பு திட்டம் பெற 2012 ஏப்ரல் மாதம் ஆகியும் தமிழக அரசு TET தேர்வு நடத்துதல் தொடர்பான பாடதிட்ட வரைவு முறைப்படுத்த முடியவில்லை. 4) கல்வி உளவியல் தவிர மற்ற பாடங்கள் தேர்வு செய்வதற்கு ஆசிரியர்கள் இடையே மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. 5) UG, B.Ed ல் பயின்ற பாடங்கள் மிகவும் குறைந்த அளவு கேள்விகளும், பயிலாத பாடங்கள் அதிக அளவிலான கேள்விகளும் TET அமைப்பு என்ற நிலைப்பாடு தமிழக அரசு எடுத்தது. உதாரணமாக, B.Sc விலங்கியல் படித்த ஒரு ஆசிரியர் B.ed முடித்து இருப்பின் அவர் இயற்பியல் வேதியியல் தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் மற்றும் கணிதம் தமிழ் ஆங்கிலம் கல்வி உளவியல் போன்ற பாடங்களில் கேட்கப்படும் 15