TET Breaking News - ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு - தேர்வு வாரியம் அதிர்ச்சி! ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் பலர் தங்கள் விடைத்தாளில் மறைமுக குறியீடுகளை எழுதியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்காக தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வு ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் தமிழகத்தில் 1 லட்சத்து 62,314 பேர் எழுதினர். தற்போது முதல்தாள் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மேற்கண்ட தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்களில் பலர் தங்கள் ஓஎம்ஆர் விடைத்தாளில் தங்களின் தவறான விடை குறியீடுகளை பதிவு செய்திருந்தவர்கள், சந்தேகத்துக்கு இடமான குறியீடுகளை விடைத்தாளில் எழுதி இருந்தவர்களின் விடைத்தாள்கள் கணினி மூலம் திருத்தப்படவில்லை. மேலும் அவர்கள் கேள்வித்தாளின் வரிசை எண்களை எழுதாமல் விட்டிருந்தனர். அவர்கள் விடைத்தாள்களும் திருத்தப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. சிலர் கேள்வித்தாள் வரிசை எண்...
Posts
Showing posts from August 21, 2019
- Get link
- X
- Other Apps
TET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் முடிவுகள் அறிவிப்பு -. 'பல பட்டதாரிகளுக்கு தேர்வு எழுதவேதெரியவில்லை' - TRB ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'பல பட்டதாரிகளுக்கு தேர்வு எழுதவே தெரியவில்லை' என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர 'டெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தன. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதில் முதல் தாளுக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. நேற்று அறிவித்தது. மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில் பெரும்பாலானவர்கள் 60 மதிப்பெண்களுக்கு குறைவாகவே பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சிலர் 85 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர்.அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு எழுதிய பட்டதாரிகள் பலருக்கு சாதாரண போட்டி தேர்வு முறையில் 'ஷேடிங்' எனப்படும் சரியான விடையை வட்டமிடும் முறை கூ...
- Get link
- X
- Other Apps
CTET - தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்குகிறது. சிபிஎஸ்இ சார்பில் 13வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று (ஆகஸ்ட் 19, 2019) தொடங்கி செப்டம்பர் 18ஆம் தேதி முடிகிறது http://ctet.nic.in என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இந்தத் தேர்வு 20 மொழிகளில் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பெறும் தேர்ச்சிக்கான மதிப்பு 7 ஆண்டுகளாகும். தேர்ச்சி பெற்றவர் ஏழு ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியில் சேர முடியும். இரண்டு தாள்களாக நடக்கும் இத்தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆகலாம். இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்றால், 6 முதல் 8 வகுப்புகளுக்கும் ஆசிரியராக முடியும்.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது. டெட் (TNTET) எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெற்றன. முதல்தாள் ஜூன் 8ம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 9ம் தேதியும் நடைபெற்றன. ஜூலை 11 ஆம் தேதி இந்தத்தேர்வுகளுக்கான தற்காலிக பதில்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், டெட் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.