Posts

Showing posts from August 12, 2019
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டியது  அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காக 8 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண் ணிக்கை 79 லட்சத்தைத் தாண்டி யுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக மட்டும் 8 லட்சத் துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கி றார்கள். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 2மாநில வேலைவாய்ப்பு அலுவல கங்களும் (சென்னை மற்றும் மதுரை), 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவ சாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான கல்வித் தகுதியை மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.இந்நிலையில் 2019, ஜூலை 31 நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்த பதிவுதாரர் களின் எண்ணிக்கை 79 லட்சத்து 44 ஆயிரத்து 97 ஆக உள்...