மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு; தகுதியானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க தமிழக தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்புதவற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. கல்வித் தகுதி: தடய அறிவியல் துறையில் எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: டிஎன்பிஎஸ்சி இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2019 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 36,900 ரூபாய் முதல் 1,16,600 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் கட்டணம்: பதிவுக் கட்டணம் 150 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். ...
Posts
Showing posts from July 10, 2019