TNPSC நேற்று வெளியிட்ட குருப்-4 தேர்வு அறிவிப்பாணைக்கு தடைக்கோரி வழக்கு! குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 26ம் தேதிக்குள் பதில் அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் -4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி இந்து வெளியிட்டது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான முழு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், டி.என்.பி.சி. குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடைக்கோரி மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் எனபவர் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழ்நாடு தேர்வாணைய கழகம் ஏற்கனவே குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் ஏராளமானோர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலர் பணிகளில் சேராத காரணத்தால் சுமார் 500 பணியிடங்கள் காலியாக இருந்தது. மேலும், அந்த பணியிடங்களை காத்திருப்போர் பட்டியல் கொண்டு நிரப்பாமல், தற்போது புதிதாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து ...
Posts
Showing posts from June 16, 2019
- Get link
- X
- Other Apps
ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: மாணவர்களுக்கு தேசபக்தியோடும், பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இந்த பணி அடுத்த வாரம் தொடங்கும். அதன் பின்னர் 11 வகையான பயிற்சி, வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கலாம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.