சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் 2,500 பேராசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் பரபரப்பு தகவல்கள் No Comments சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பணிபுரியும் 2,500 பேராசிரியர்கள் தகுதியற்றவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் தேர்ச்சியுடன், தேசிய தகுதி தேர்வு (நெட்) அல்லது மாநிலதகுதி தேர்வு (செட்) ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதேபோல், பல்கலைக்கழக மானியக்குழு விதி 2009-ன்படி ஆராய்ச்சி படிப்பு முடித்திருந்தாலும் உதவி பேராசிரியர்களாக இருக்கலாம். அந்த வகையில் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கும் 90 இணைப்பு கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் பணிபுரிகிறார்களா? என்பது குறித்து சென்னை பல்கலைக்கழகம் சரிபார்த்தது. அதில் 30 சதவீதம் பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதிகளின்படி தகுதியற்றவர்கள் என்பதை சென்னை பல்கலைக்கழகம் கண்டு பிடித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கூறுகையில...
Posts
Showing posts from June 12, 2019