Posts

Showing posts from June 10, 2019
Image
திங்கள்கிழமை 10 ஜூன் 2019       ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம்: தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் DIN |   Published: 10th June 2019 01:02 AM       ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளைப் போன்று இரண்டாம் தாளும் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் கூறினார்.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 32 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,081 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு 10 மணிக்குத் தொடங்கியபோதும் காலை 8 மணி முதலே ...