மாநில செய்திகள் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கியது முதல் தாள் தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதினர் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் தாள் தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று நடந்த முதல் தாள் தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதினார்கள். ஆசிரியர் தகுதி 2-ம் தாள் தேர்வு இன்று (ஞாயிறு) நடக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ...
Posts
Showing posts from June 9, 2019
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: அமைச்சர் 2013 ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 82 ஆயிரம் பேர் காத்திருப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணி வழங்கும் நிலையில் அரசு இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- ஆசிரியர்கள் பணி நியமனத்தினைப் பொறுத்தவரையில், 2013 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 82 ஆயிரத்து 372 பேர் உள்ளனர். அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தருவது என்பது அரசின் மூலமாக வாய்ப்புகள் இல்லை என்றார்.