TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை: அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில்லை என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். மேலும் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் தான் மீண்டும் பணிவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Posts
Showing posts from June 6, 2019
- Get link
- X
- Other Apps
TET - ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு! ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில், வாரியம் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தேவி என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என்ற தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதியை, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பின்பற்றவில்லை. 45 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இதுதொடர்பாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க , உத்தரவிட்டு ஒத்தி வைத்தது. Email This BlogThis! Share to Twitter Share to Facebook
- Get link
- X
- Other Apps
MBBS - BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல், பெறலாம்! 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, இன்று முதல், ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ், - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 3,650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நடைபெற உள்ளது.நீட் தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, www.tnhealth.org மற்றும், www.tnmedicalselection.net என்ற, இணைய தளங்களில், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
TET தேர்வில் எஸ்சி - எஸ்டி குறைந்தபட்ச மதிப்பெண் உயர்வை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு No Comments ஆசிரியர் தகுதி தேர்வெழுத எஸ்சி-எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென்பதை எதிர்த்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப். 28ல் வெளியிட்டது. அதில், எஸ்சி - எஸ்டி பிரிவினர் பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் கல்வியியல் பட்டத்தை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக்கழகத்தின் விதிப்படி, எஸ்சி - எஸ்டி பிரிவினர் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்ணுடன் கல்வியியல் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது என கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டுமென கூறுகின்றனர். ...