
நீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு? மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. கடந்த காலங்களில் சி.பி.எஸ்.இ அமைப்பானது நீட் தேர்வு நடத்திய நிலையில், இந்த ஆண்டு முதல் இதற்கென தேசிய தேர்வு முகமை உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. எனினும், நீட் தேர்வு நடந்த அன்று கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக சுமார் 600 மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. மேலும், ஒடிசா மாநிலத்தில் போனி புயல் காரணமாக நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கவில்லை. மேற்கண்ட இரு காரணங்களால் 5-ம் தேதி எழுத முடியாதவர்களுக்கு 20-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் இணையதளமான ntaneet.nic.in -ல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்...