Posts

Showing posts from June 3, 2019
உதவி பொறியாளர் பணிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஜூன் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்   No   Comments டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு விரைவில் 460 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ் வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பொறியியல் பணி மற்றும் தமிழ்நாடு மின்னியல் ஆய்வக பணியில் உதவி பொறியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் (உதவிமின் ஆய்வாளர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவிஇயக்குநர்) 460 காலியிடங் களையும் தமிழ்நாடு கட்டிடக்கலை பணியில் ஜூனியர் ஆர்க்கிடெக்ட் பதவியில் 15 காலியிடங்களையும் போட்டித்தேர்வு மூலம் நேரடியாகநிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்புவெளியிட்டுள்ளது. இக்காலியிடங் கள் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட துறைகளில் இடம்பெற்றுள்ளன.உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) பதவிக்கு பிஇ (விவசாயம்), பிடெக் (வேளாண் பொறியியல்) மற்றும் பிஇ மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல், புரடக்சன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்ப...