Posts

Showing posts from May 27, 2019
TNPSC Group-2 & 2A தேர்வுஉள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் TNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுஉள்ளிட்ட  பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும்? டிஇஓ தேர்வு உட்பட ஒரேநாளில் 9 போட்டித்தேர்வுகளின் முடிவு களை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை படைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய வனச் சரக அலுவலர் தேர்வு, தொழில் துறை முதுநிலை வேதியியலாளர் தேர்வு, ஊரமைப்பு கட்டிடக்கலைஉவியாளர், திட்ட உதவியாளர் தேர்வு, அரசு ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி பொறியாளர் தேர்வு, மாவட்ட கல்வி அலுவலர் (டிஇஓ) தேர்வு,வணிகத்துறை உப்பு ஆய் வாளர் தேர்வு, தடயஅறிவியல் துறை பண்டக காப்பாளர் தேர்வு, பல்வேறு துறைகளில் நூலகர் தேர்வு, உதவி வேளாண் அலு வலர் தேர்வு ஆகிய 9 போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வியாழக் கிழமை ஒரேநாளில் வெளியிடப் பட்டன. தேர்வு முடிவுகளின்படி, அடுத்த கட்ட நிலைகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்ப தாரர்களின் பதிவெண்கள் அடங் கிய பட்டியலை இணையதளத் தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்...
தமிழக அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம். தமிழக அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம்உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,"வரும் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி,  அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த மாத இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்கவேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என  குறிப்பிடப்பட்டுள்ளது