Posts

Showing posts from May 4, 2019
கட்டாயக் கல்வி திட்டத்தில் தனியார்பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 51 ஆயிரம் பேர் விண்ணப்பம்: மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! இலவச, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழகம் முழுவதும் இதுவரை 51ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது. இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி, மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.43 லட்சம் இடங்கள் உள்ளன.இந்நிலையில், வரும் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது. இதுவரை 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான அவகாசம் மே 18-ம் தேதியுடன் முடிகிறது. எனவே, விருப்பம் உள்ள பெற்றோர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) விண்ண...