Posts

Showing posts from March 1, 2019
Image
TNTET 2019-க்கு 15ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு   ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதை அடுத்து தகுதியுள்ள நபர்கள் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் ேததி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தாள் ஒன்று (இடைநிலை ஆசிரியர்கள்), தாள் இரண்டு (பட்டதாரி ஆசிரியர்கள்) தேர்வு நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தாள் ஒன்றுக்கான தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த பாடங்களில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு கேள்விகளும், மொழிப்பாடங்களில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது 30, ஆங்கில மொழிப்பாடத்தில் 30, கணக்கு 30, சுற்றுச்சூழலியல் பாடத்தில் 30 கேள்விகள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். தாள் இரண்டுக்கான தேர்வில் குழந்தை மேம்பாடு 30, மொழிகள் 30, ஆங்கிலம் (கட்டாயம்) 30, கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள் அல்லது சமூக அறிவியல் ஆசிரியர்கள், இதர பாட ஆசிரியர்களுக்கான தேர்வில்
Image
TNTET - Tamilnadu Teacher Eligibility Test 2019 - Official Notification Published by TRB டெட் தேர்வு 2019-க்கான அறிவிப்பு வெளியீடு! பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேதி குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளது... ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 க்கான அறிவிக்கை விவரம் : 👉அறிவிக்கை நாள்: 28.02.2019 👉ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.03.2019 👉ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2019 👉தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.  👉D.T.Ed , B.Ed இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 👉விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். 👉தாள் I மற்றும் தாள் II க்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 👉விண்ணப்பிக்கும் போது கோரப்படும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும். 👉தேர்வுக் கட்டணம்: SC,SCA,ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250/- 👉மற்றவர்களுக்கு ரூ.500/-. 👉விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக மட்டுமே ச