Posts

Showing posts from February 23, 2019
பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட் பெறலாம். அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட் பெறலாம். தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஹால் டிக்கெட் இல்லாதோர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Image
இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியீடு. [ Railway Recruitment Boards (RRBs) and Railway Recruitment Cells (RRCs) invite Online Application from Eligible Candidates ] RRB/CENTRALISED EMPLOYMENT NOTICE (CEN) NO.01/2019,02/2019 & 03/2019 Railway Recruitment Boards (RRBs) and Railway Recruitment Cells (RRCs) invite Online Application from Eligible Candidates for the posts :   இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே துறையில் தென்னக ரெயில்வே, மேற்கு ரெயில்வே உள்பட 16 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர்மற்றும் தட்டச்சர், டிக்கெட் வழங்குபவர், நிலைய அதிகாரி, சரக்கு ரெயில் பணியாளர், இளநிலை கணக்கு உதவியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர், ஈ.சி.ஜி. டெக்னீசியன், ஆய்வக கண்காணிப்பாளர், உதவியாளர், சுருக்கெழுத்தர், தலைமை சட்ட உதவியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர் (இந்தி), தண்டவாள பரா...
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், அறிவியல் பாடத்துக்கு, செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதுதொடர்பான பயிற்சி வகுப்புகள், தனி தேர்வர்களுக்கு ஏற்கனவே, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன. எந்தப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்ததோ, அந்த பள்ளியிலேயே செய்முறை தேர்வும் நடத்தப்படும். வரும், 26 முதல், 28ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடக்கும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களுக்குரிய பள்ளிகளை அணுகி, தலைமைஆசிரியரிடம், செய்முறை தேர்வு குறித்த தகவலை பெற்று பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Image
5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு இனி எப்போதுமே பொதுத் தேர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தவறான செய்திகள் வருகின்றன. மாநில அரசு விரும்பினால் பொதுத் தேர்வைக் கொண்டு வரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் கொண்டு வருவதாக இருந்தால் அதற்காக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டில் மட்டுமல்ல, இனி எப்போதும் 5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றார்.