TRB - தேர்வு முறைகேடு: முக்கிய புள்ளி கைது! அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு,விரிவுரையாளர்களை தேர்வு செய்ய நடந்த தேர்வில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2017ல் தேர்வு நடத்தி, அதன் முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக, வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.பின், முறைகேட்டில் ஈடுபட்ட, சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி உள்ளிட்ட, 17 பேரை கைது செய்தனர். இதில், ஒன்பது பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர். இந்நிலையில்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, முக்கிய குற்றவாளியான, தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்த கதிரவன் என்ற கதிரேஷ் குமார் என்பவனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில், இதுவரை, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Posts
Showing posts from January 7, 2019
- Get link
- X
- Other Apps
அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ புத்தகம் இல்லை - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பருவ முறை புத்தகம் அடுத்த ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் அனைத்து கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமச்சீர் கல்வி முறையும் கொண்டு வரப்பட்டது.பின்னர் அரசுப் பள்ளிகளில் முப்பருவ முறை அறிவிக்கப்பட்டு, தொடக்கத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கும் முப்பருவ முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி 2011ம் ஆண்டு முதல் முப்பருவ முறை வந்தது. அதற்காக ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகம் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் 9ம் வகுப்பு வரை செயல்படுகிறது. ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளுக்கும் முப்பருவ புத்தகங்களைதமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கி வருக...