Posts

Showing posts from January 5, 2019
Image
10ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சிக் கட்டகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு! 10th - Study Materials 10th All Subject - School Education Modules ( பயிற்சிக் கட்டகம்) 10th All Subject - School Education Modules ( பயிற்சிக் கட்டகம்)  -  Click here
ஆசிரியர்கள் நியமனம் எப்போது?: அமைச்சர் செங்கோட்டையன் பதில்  ஆசிரியர்கள் நியமனம் எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது,பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக, திமுக உறுப்பினர்பி.என்.பி.இன்பசேகரன் மற்றும் பிற உறுப்பினர்கள் எழுப்பிய பிரதான வினா, துணை வினாக்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்:- பள்ளிகளை தரம் உயர்த்துவது, அவற்றுக்கு கட்டடங்கள் கட்டுவது போன்ற பணிகள் நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகளவுஇருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, ஆசிரியர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனாலும், மகப்பேறு விடுப்பு காரணமாக ஆசிரியைகள் 9 மாதங்கள் செல்வதால் பணியிடங்கள் காலியாகி விடுகின்றன. தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தடையாணை உள்ளது. இந்தத் தடையாணை விலக்கப்பட்ட பிறகு காலிப் பணியிடங்கள் இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.
ஆசிரியர்கள் தகுதித் தேர்வுஎழுதுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து! தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணி செய்ய தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் 2009 நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது.  தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது.  மேற்குறிப்பிட்ட ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு விதி விலக்கு வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டனர். பின்னர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் 2015ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு எழுத நீதிமன்றம் அவகாசம் அளித்தது. மீண்டும் 2019 மார்ச் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் வரும