ரயில்வே துறை வேலைகளுக்கு இனி RRB தேர்வு கிடையாது.!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வேவில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி அந்த துறையில் வேலைகளில் சேருவதற்கு RRB தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். அதன்பின் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு ரயிவே துறையில் வேலை வழங்கப்படும். ஆனால் இனி RRB தேர்வு நடத்தப்பட மாட்டது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
RRB தேர்வுக்கு பதிலாக UPSC தேர்வு வாரியம் , ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும் என ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு மூலம் ரயில்வேயின் 5 பிரிவுகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுபவார்கள் என்றும் இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் ரயில்வேயின் IRMS எனப்படும் இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனத்திற்கு சொந்தமான எந்த துறைகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர் என வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment