2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு!!
பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த மாதம் செய்முறை தேர்வை நடத்த, பள்ளி கல்வித்துறைஏற்பாடு செய்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. பிளஸ் 1க்கு, மார்ச், 4லும், 10ம் வகுப்புக்கு, மார்ச், 17லும், பொதுத்தேர்வு துவங்க உள்ளன.பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வு துறையும், பள்ளி கல்வித்துறையும் மேற்கொண்டுள்ளன. இதன்படி, பிளஸ் 2வுக்கு அடுத்த மாதம் இறுதியில், செய்முறை தேர்வை நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.
மாவட்ட வாரியாக தேர்வு மையங்கள் அமைத்தல், செய்முறை தேர்வுக்கான ஆய்வகங்களை முடிவு செய்தல், அதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்தல் ஆகிய பணிகள் துவங்கப் பட்டுள்ளன.இந்த பணிகளை டிசம்பர் இறுதிக்குள் முடித்து, தேர்வு மையம் மற்றும் செய்முறை தேர்வுக்கான கண்காணிப்பாளர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments
Post a Comment