தொலை தூரத்தில் தேர்வு மையங்கள்.. தமிழக பெண்களுக்கு எட்டாக் கனியாகும் அரசு பணிகள்?

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு கூட பெண்கள் விண்ணப்பிக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சீனியாரிட்டி படி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. காலப் போக்கில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியிடம் என்கிற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு
பணி நியமன ஆணை

அப்படியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் காத்திருந்தும் பணி நியமன ஆணை கிடைக்காமல் மீண்டும் தேர்வு எழுதுகிற நிலைக்கு பல்லாயிரக்கணக்கான பேர் தள்ளப்படுகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு
பணி நியமன ஆணை

அப்படியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் காத்திருந்தும் பணி நியமன ஆணை கிடைக்காமல் மீண்டும் தேர்வு எழுதுகிற நிலைக்கு பல்லாயிரக்கணக்கான பேர் தள்ளப்படுகின்றனர்.

வனக்காவலர் தேர்வு
மீண்டும் தொலைதூரத்தில்...

இதேபோல் தமிழக அரசின் வனத்துறையும் வனக்காவலர் பணியிடத்துக்கான தேர்வுகளை நடத்துகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துதான் போயினர். 3 மணிநேரம் பயணம் செய்யக் கூடிய நகரங்களுக்கு தேர்வு மையங்கள் போடப்பட்டிருப்பதால் ஆண்களும் பெண்களும் சரி தேர்வே எழுதாமல் விட்டுவிடலாம் என்கிற முடிவுக்கு வருகின்றனர்.
எளிதான வழி
மாவட்டங்களில் தேர்வு மையங்கள்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் புற்றீசல்போல பள்ளி, கல்லூரிகள் பெருகிக் கிடக்கின்றன. இவற்றை தேர்வு மையமாக்கி விண்ணப்பதாரர்களை அலைகழிக்க வைக்காமல் இருக்க முடியும். இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் போனால் தமிழக பெண்களுக்கு அரசு பணி எட்டாக்கனியாகிவிடும் என்பதுதான் மக்களின் அச்சம்.




Comments

Popular posts from this blog