முதுநிலை ஆசிரியா் தோ்வு 2019 : உத்தேச விடைக்குறிப்பு ஆன்லைனில் வெளியீடு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் பணிக்கான போட்டித்தோ்வுக்குரிய உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டித்தோ்வு, கடந்த செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது.
தற்போது தோ்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக் குறிப்புகள்ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்பின் மீது தோ்வா்கள் ஏதேனும் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால், வரும் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்குள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதள முகவரியில் ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment