பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை திங்கள் மாலை அரசுத்தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

அதையடுத்து ஏற்கனேவே வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது; மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

அதன் முழுமையான விபரம் வருமாறு:

மார்ச் 27 - மொழிப்பாடம்

மார்ச் 28 - விருப்பப்பாடம்

மார்ச் 31 - ஆங்கிலம்

ஏப்.3 - சமூக அறிவியல்

ஏப்.7 - அறிவியல்
ஏப். 13 - கணிதம்

* மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்


Comments

Popular posts from this blog