காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொதுதேர்வு வினாத்தாள் அமையும்' என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில், வினாத்தாள் எப்படி இருக்கும் என, தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பும். ஆனால், இந்த ஆண்டு, வினாத்தாள் எப்படி இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், வினாத்தாள் முறை குறித்து, தேர்வு துறை வட்டாரத்தில் விசாரித்த போது, 'காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையிலேயே, பொது தேர்வு வினாத்தாள் அமையும்' என, கூறப்படுகிறது.காலாண்டுதேர்வுக்கான வினாத்தாள்களை, தேர்வு துறையே தயாரித்து வழங்குவதால், அதில், கேள்விகள் இடம் பெற்றுள்ள முறைகளை, மாணவர்கள் பார்த்து, அதற்கேற்ப தயாராக வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி வழியாக, விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என, தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன

Comments

Popular posts from this blog