ஜிப்மர் எம்பிபிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு



புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கான எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவு நேற்று வெளி யானது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 150 இடங்கள், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஜிப்மர் இணையதளத் தில்(http://www.jipmer.edu.in) எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

அகில இந்திய ஒதுக்கீடுக் கான பொதுப்பிரிவில் முதல் 3 இடங்களில் அருணாங்ஷு பட்டாச்சாரியா (99.998), பிரதீக் உபாத்யாய் (99.988), அர்யான் பன்சல் (99.997) ஆகியோரும் புதுச்சேரி ஒதுக்கீடுக்கான பொதுப்பிரிவில் முதல் 3 இடங்களில் மோனிஷா பிரியா (99.723), ஆனந்தகிருஷ்ணன் (99.491), குமரேஷ்வர் (99.080)ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர். வருகிற 26-ம் தேதி அகில இந்திய பொதுப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ம் தேதி ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், 28-ம் தேதி புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் என்ஆர்ஐ-ஓசிஐ பிரிவினருக்கான முதற் கட்ட கலந்தாய்வு ஜிப்மர் அகடாமிக் சென்டரில் நடக் கிறது.

Comments

Popular posts from this blog