TRB - தேர்வு முறைகேடு: முக்கிய புள்ளி கைது!
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு,விரிவுரையாளர்களை தேர்வு செய்ய நடந்த தேர்வில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2017ல் தேர்வு நடத்தி, அதன் முடிவுகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக, வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.பின், முறைகேட்டில் ஈடுபட்ட, சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி உள்ளிட்ட, 17 பேரை கைது செய்தனர். இதில், ஒன்பது பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர்.
இந்நிலையில்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, முக்கிய குற்றவாளியான, தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரை சேர்ந்த கதிரவன் என்ற கதிரேஷ் குமார் என்பவனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில், இதுவரை, 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Comments
Post a Comment