Sslc Maths by Muruga Vel on Scribd
Posts
Showing posts from September 10, 2018
- Get link
- X
- Other Apps
TET - தகுதியை வளர்கிறதா தகுதிதேர்வு ??கானல் நீராகும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் - பயிற்சி முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ! அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், ஆசிரியர் பயிற்சி முடித்த சுமார் 8.50 லட்சம் பேர் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையும் சரிந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகள் கேட்பாரற்ற நிலையில் இருக்கின்றன. புதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் போதுமான கவனம் செலுத்தவில்லை என கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர். அதனால், மாணவர்கள் சேர்க்கையும்சரிய தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில், 5,919 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதுதவிர, 1,909 அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதேபோல், 31,393 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. மேலும், 6,597 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி சுமார் 90 லட்சம் மாணவர்கள...
- Get link
- X
- Other Apps
அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2640 காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்க...