அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல்! அரசு பள்ளிகளில், 3,700 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடவாரியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இரு ஆண்டுகளாக, முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. கடந்த மாதம், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக, 1,000க்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு பெற்றனர். 95 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில், 900 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதனால், அரசு பள்ளிகளில், 3,700க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதுகுறித்து, அரசு முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பொறுத்தவரை, அனைத்து வேலைநாட்களில் பாடம் நடத்தினால் கூட, முழுமையாக முடிப்பது சிரமம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என...
Posts
Showing posts from August 18, 2018
- Get link
- X
- Other Apps
'ப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' இல்லாமல், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, 'மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பள்ளி கல்வித்துறையில், புதிய திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக பாடத்திட்ட மாற்றம், தனியார் பள்ளிகளுக்கான நிர்வாக மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என, புதிய மாற்றங்கள் அமலாகிஉள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வுகளிலும் மாற்றங்கள் அமலுக்கு வந்து உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், மாணவர்களுக்கு, 'ப்ளூ பிரின்ட்' என்ற, வினாத்தாள் கட்டமைப்பு இல்லாமல், புதிய கேள்விகள் வடிவமைக்கப் பட்டன. மேலும், மாதிரி வினாத்தாள் அல்லது வினாத் தாளின் அமைப்பு குறித்த, முன் அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இதனால், பிளஸ் 1 தேர்வில், மதிப்பெண் பெறுவதில், மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிஉள்ளது. பிளஸ் 2க்...