Posts

Showing posts from August 17, 2018
10th Maths - Unit 1,2,3,4 Study Material | Mr. S. Murugavel -   English Medium Click Here
10th Maths - Chapter 7 & 11 - Important 2 And 5 Mark Questions SSLC - Maths - Study Materials  10th - Maths -  Chapter 7 - Important 2 And 5 Mark Questions - Mr Muruga vel -  Click here 10th - Maths -  Chapter 11 - Important 2 And 5 Mark Questions - Mr Muruga vel -   Click here
TNPSC - குரூப் 2ஏ தேர்வு: 27-இல் சான்றிதழ் சரிபார்ப்பு! குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 27 -ஆம் தேதி நடைபெறும்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. தேர்ச்சி பெற்றோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அவர்களது மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் சென்னையில் உள்ளதேர்வாணைய அலுவலகத்தில் வரும் 27 -ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்தெரிவித்துள்ளார்.
Image
TRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு! எந்த சான்றிதழ் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? - விளக்கம் கேட்கும் கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது? என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரா...
2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் :பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்பட உள்ளது எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். மேலும் மாதிரி பள்ளிகளுக்கு அரசு தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. அந்த மாதிரி பள்ளிகளில் ஒன்றாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவாகி உள்ளது. இந்த பள்ளியில் தரமான ஆய்வுக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம், சி.சி.டி.வி. கேமரா, தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை உள்ளன. அங்கு மாதிரி பள்ளிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாதிரி பள்ளியை தொடங்கிவைத்து பேசியதாவ...