10ம் வகுப்புக்கு வரும் 28ல் தற்காலிக சான்றிதழ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிந்தது. இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்களுடன், எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவு வரும். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 28ல் வழங்கப்படும். தேர்வர்கள், தங்கள் பள்ளிகளில் சான்றிதழை பெறலாம். தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்...
Posts
Showing posts from May 24, 2018
- Get link
- X
- Other Apps
பத்தாம் வகுப்பு தேர்வில் சிவகங்கை முதலிடம் சிவகங்கை மாவட்டம், பத்தாம் வகுப்பு தேர்வில் முதன்முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 3,926 மாணவர்கள், 4,165 மாணவிகள் என, 8,091 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,844 மாணவர்கள், 4,137 மாணவிகள் என, 7,981 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 97.91 சதவீதம், மாணவிகள் 99.33 சதவீதம், மொத்தம் 98.64 சதவீதம் தேர்ச்சி. தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 148 பள்ளிகளைச் சேர்ந்த 5,469 மாணவர்கள், 5,277 மாணவிகள் என, 10,746 பேர் தேர்வு எழுதினர். இதில் 5,338 மாணவர்கள், 5,236 மாணவிகள் என, 10,574 பேர் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்கள் 97.60 சதவீதம், மாணவிகள் 99.22 சதவீதம், மொத்தம் 98.40 சதவீதம் தேர்ச்சி. சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் 275 பள்ளிகளைச் சேர்ந்த 9,395 மாணவர்கள், 9,442 மாணவிகள் என, 18,837 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,182 மாணவர்கள், 9,373 மாணவிகள் என, 18,555 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 97.73 சதவீதம், மாணவிகள் 99.27 சதவீதம், மொத்தம் 98.50 சதவீதம் தேர்ச்சி. சிவகங்கை மாவட்டம் சென்ற ஆண்ட...
- Get link
- X
- Other Apps
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை !!! பத்தாம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை திருத்தத்தில், மதிப்பெண்ணை வாரி வழங்கியதால், ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அரசு தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், வினாத்தாள் கடினமாக இருந்தது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் பல கேள்விகள், மாணவர்களின் அறிவு நுட்பத்தை சோதிக்கும் விதமாக இருந்தது. இது குறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால், தேர்ச்சி சதவீதம் மற்றும் மதிப்பெண்ணில் பாதிப்பு இருக்கும் என, கருதப்பட்டது.ஆனால், எந்த பாதிப்புமின்றி, மற்ற ஆண்டுகளை விட அமோகமான தேர்ச்சியும், மதிப்பெண்களும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு, 10.01 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 2017ஐ விட, ஒரு சதவீதம் கூடுதலாக, 94.45 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. ஐந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தான் அதிக மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில், 2014ல், 90.70 சத...