Posts

Showing posts from March 30, 2018
RTE ADMISSION : இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 20 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அல்லாத, தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுவர். எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த சேர்க்கைக்கு, நன்கொடையோ, கல்வி கட்டணமோ செலுத்த தேவையில்லை. இந்த ஒதுக்கீட்டில், பள்ளிகளில் சேரும் மாணவர்கள், 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை.தமிழகத்தில், இச்சட்டப்படி, மாணவர்களை சேர்க்க, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான, இலவச மாணவர் சேர்க்கை பெற, ஏப்., 20 முதல், மே, 18 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். தமிழக பள்ளிக் கல்வி துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ
1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 ம