SSLC MATHS 5 Marks Compulsory by Muruga Vel on Scribd
Posts
Showing posts from March 10, 2018
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்? அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அத்தேர்வு மூலமாக 3,375 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லாததால் 1,060 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இந்த காலியிடங்களையும் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களையும் சேர்த்து, புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர்...
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிப்பு மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது. மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150 இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அ...