பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என மொத்தத்தில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர். சென்னை மாநகரில் 407 பள்ளிகளில் இருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 50 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 147 பள்ளிகளில் இருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் மாணவர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலை தேர்வினை 5 லட்சத...