பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Posts
Showing posts from February 3, 2018
- Get link
- X
- Other Apps
பிழையில்லாத வினாத்தாள் : தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தல் 'பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன. அதற்கான ஏற்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளன. வினாத்தாள்கள், அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி துவங்கும். கடந்த ஆண்டில், வேதியியல், பொருளியல், உயிரியல், வேளாண் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான, வினாத்தாள்களில் விடைக்குறிப்புகள் தவறாக இருந்தன. இரண்டு வகை விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின், விடைத்தாள் திருத்தத்தின் போது, கருணை மதிப்பெண் வழங்கி, அதை சரிக்கட்டினர். எனவே, இந்த ஆண்டு தேர்வுகளில், வினாத்தாள்களில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்றும், அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். 'கற்ப...