மத்திய அரசில் 1330 துணை ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 1330 துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையுள்ள இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 1330

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Sub-Inspector (Male) in Delhi Police - 97 Open - 86, Ex-Ser - 11)
பணி: Sub-Inspector in Delhi Police/ Female - 53  (Open - 53)

சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400 

பணி:  Sub-Inspector (GD) in CAPFs - 1180 (Open - 1073), (Ex-Ser - 107)
சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் இலகுரக வாகன (இரு சக்கர வாகனம் மற்றும் கார்) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு (PST,PET) மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  http://ssc.nic.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/noticesicpo2018_03032018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog