Posts

Showing posts from December 20, 2017
பாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர்வு எழுதிய 196 பேர் மீது போலீசில் புகார் தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்பின்னர் பெறப்பட்ட புகார் மனுக்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் திரும்ப பெறப்பட்டன. அனைத்து தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது. இதனையடுத்து தேர்வில் முறைகேடு நடந்து இருப்பது ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 196 பேர் மீது புகார் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நடத்திய எழுத்துத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. ஏற்கனவே வெளியிட்ட மதிப்பெண்களுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 60 முதல் 80 ம
10ம் வகுப்பு தனித்தேர்வு: 22 முதல் விண்ணப்பம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, தனித் தேர்வர்கள், வரும், 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது. இதில், 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வில், பள்ளிகளில் மாணவராக இல்லாமல், நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 22 முதல், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.தேர்வுத்துறைக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க சேவை மையங்களை அணுக வேண்டும். சேவை மைய விபரங்கள் www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான நிபந்தனைகளையும், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.