Posts

Showing posts from November 25, 2017
TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி? கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.  பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான *கணிதக்* கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.*நடப்பு நிகழ்வுகள்* குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.  இதற்கு விடையளிக்க, தினமும்*செய்தித்தாள்களைப்* படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.*அறிவியல்* பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். *கம்ப்யு ட்டர் சயின்சில்* அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்ப...
மத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம் மத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின், நவோதயா வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும், 576 மாவட்டங்களில் செயல்படுகின்றன.  மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், உண்டு, உறைவிட பள்ளிகளாக, அவை செயல்படுகின்றன. இவற்றில், மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், நவோதயா பள்ளிகள் மற்றும் மண்டல அலுவலகத்தில், காலியாக உள்ள, எட்டு பதவிகளில், 683 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது. தணிக்கை உதவியாளர், சுருக்கெழுத்தர், ஹிந்தி மொழி பெயர்ப்பாளர், பெண் செவிலியர், கீழ் நிலை எழுத்தர், கிடங்கு காப்பாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பதவிகளில், ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவியில் சேர விரும்புவோர், டிச.,13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விபரங்களை, www.nvshq.org / www.nvsnt2017.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.