Posts

Showing posts from October 7, 2017
அரசு வேலைக்கு 79.81 லட்சம் பேர் காத்திருப்பு அரசு வேலைக்காக, 79.81 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து காத்திருக்கின்றனர்.  தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், செப்., 30 நிலவரப்படி, 78.81 லட்சம் பேர், வேலைக்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.86 லட்சம்; கல்லுாரி மாணவர்கள்,  14.52 லட்சம்; 24 முதல், 35 வயது வரை, 30.72 லட்சம்; 56 வயது வரை, 11.65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 57 வயதுக்கு மேற்பட்ட, 5,695 பேர், வேலைக்கு பதிவு செய்துள்ளதாகவும், வேலை வாய்ப்பகம் தெரிவித்துள்ளது.
'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை' ''இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்தார். இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டு அமைப்பின் சார்பில், இன்ஜி., நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு, வேலுார், வி.ஐ.டி., பல்கலை வேந்தர், ஜி.விஸ்வநாதன் தலைமையில், சென்னையில் நடந்தது. இதில், ஏ.ஐ.சி.டி.இ., யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே பேசியதாவது: இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பல்கலைகளின் தரத்தை உறுதிப்படுத்துவது, ஏ.ஐ.சி.டி.இ.,யின் கையில் இல்லை; அதற்கு கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.  தேசிய தர அமைப்பான, என்.பி.ஏ.,வை போல், யு.ஜி.சி.,யின் தேசிய தரம் மற்றும் அங்கீகாரத்துக்கான, 'நாக்' அமைப்பு விரைவில் தனியாக பிரிக்கப்படும்.  கல்லுாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, தர அங்கீகாரம் வழங்கப்படும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்படுவதை, ஏ.ஐ.சி.டி.இ., ஏற்காது...