3ஆம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அறிவியல் பாடம்!!!
Posts
Showing posts from October 2, 2017
- Get link
- X
- Other Apps
காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., ௨௨ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து
- Get link
- X
- Other Apps
10 மாநிலங்களில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு : நீட் மற்றும் போட்டி தேர்வு தகவல்கள் சேகரிப்பு கேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின் மாணவர்களை அதற்கு ஏற்ப தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி யமைப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை எடுத்து வருகிறது. மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு மாறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குதையும் எளிதாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களில் குறிப்பாக டில்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்தில் நீட் தேர்விற்கு மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையங்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 10 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.இதன்படி, இணை இயக்குனர்கள் நாகராஜ முருகன் - டில்லி, பொன்குமார் - மும்பை, செல்வக்குமார் - ராஜஸ்தான், குப்புசாமி - ஜெய்பூர், குமார்- ைஹதராபா