Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்களுக்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.
Posts
Showing posts from September 28, 2017
- Get link
- X
- Other Apps
வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம் :பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ''வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்,'' என, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை தரிசனம் செய்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், கல்வித் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக, 412 தேர்வு மையங்கள் துவங்கப்படும். அடுத்த மாதம் முதல், அந்த மையங்கள் செயல்படும். மேலும் கூடுதல் மையங்கள் திறக்கப்படும். அதுபோல, 32 மாவட்டங்களின் தலைநகரங்களில், அரசு நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கான நுால்கள் அளிக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். கற்றலுக்கு ஏற்றபடி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- Get link
- X
- Other Apps
சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின. இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன. தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு